கடலூர் : காவல்துறை அனுமதி கொடுத்தும் பரப்புரையை ரத்து செய்த விஜய்!

கடலூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக்கு மட்டுமே அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Hero Image

சென்னை : தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய் நாளை (ஏப்ரல் 18) கடலூரில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது.ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி அளிக்காததால் பரப்புரை ரத்து செய்யப்பட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், காவல்துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது“கடலூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக்கு மட்டுமே அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவுக்கு தனியாக அனுமதி கேட்கப்படவில்லை. எனவே ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.”மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடத்த மட்டும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

ரோடு ஷோ தொடர்பாக தனியாக அனுமதி கோரப்படாததால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவெக தரப்பினர், “ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்கப்படாததால் முழு பரப்புரையையும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரைக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பாக காவல்துறை தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தது. ஆனால் ரோடு ஷோ அனுமதி கோரப்படாததால், பொதுக் கூட்டம் மட்டுமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், தவெகவினர் ரோடு ஷோ அனுமதி மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி கோரப்பட்டதாகவும், ரோடு ஷோவுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடலூர் : காவல்துறை அனுமதி கொடுத்தும் பரப்புரையை ரத்து செய்த விஜய்!