சென்னை ஐஐடி-யில் மேலும் 8 பேருக்கு கொரோனா!

Today, 8 more people have been confirmed to have corona infection, bringing the number of infected people in IITs to 191.

இன்று மேலும் 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐஐடியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், கொரோனா வாஇரசால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னை ஐஐடியில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, இன்று மேலும் 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஐடியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.