#Breaking: மூன்றாம் நாளாக 3,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. 14 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் மேலும் 3,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,99,807 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 82,791 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 3,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,99,807 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 1,344 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,65,071 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 14 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,958 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 10,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TamilNadu Statistics :- [04/04/2021]#TNCorona #TamilNadu #COVID19 pic.twitter.com/n5cCcmI2rL
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) April 4, 2021