இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை! – அமைச்சர் செங்கோட்டையன்

Minister Senkottayan said it was up to the Chief Minister to decide whether to declare this year as a zero academic year.

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பகுதியில், அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மினி கிளினிக்கை திறந்துவைத்தார். அதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கிராமங்களை நோக்கி மருத்துவர்கள், செவிலியர்களுடன் 2000 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52.47 லட்சம் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும், இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் சூழ்நிலைக்கேற்ப முதலமைச்சர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அந்த முடிவுகளை தான் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பொங்கல் பரிசு வழங்க உள்ள நிலையில் நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் பழுது குறித்து பல இடங்களில் புகார் வந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.