தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – இயக்குனர் ஷங்கர்..!!

Default Image

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் தனது வாழ்த்தை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டுமே 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராக  திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றார். இவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில், இயக்குனர் ஷங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் “எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு தொகை மற்றும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் ஆகியவற்றை பாராட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்