#BREAKING: இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்- பேரவை நாளை ஒத்திவைப்பு.!

A resolution of condolence was passed for 22 persons, including the late Minister Thuraikannu, during the Tamil Nadu Legislative Assembly session and the Assembly was adjourned till tomorrow.

கூட்டத்தொடரில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

அதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இன்று பேரவையில் முன்னாள் அமைச்சா் துரைக்கண்ணு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவா் சாந்தா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கபப்ட்டது.

மேலும், நாளை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப் பெற்று அதன்மீது விவாதம் நடைபெறும். 5-ஆம் தேதி அன்று விவாதம் தொடர்ந்து  பதிலுரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றுஇரண்டாவது நாளாக கூடிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுசட்டப்பேரவைநாளை ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், 3-வது நாளாக நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது.