குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் பிருந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்