#BREAKING: முதலமைச்சர் பழனிசாமி கடலூரில் நாளை நேரில் ஆய்வு

With heavy rains due to the storm, Chief Minister Palaniachai will visit the flood-affected areas in Cuddalore district tomorrow.

புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் ,கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர்  பழனிச்சாமி நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது.குறிப்பாக கடலூர் மாவட்டத்தில்காணும் இடமெல்லாம்வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக  கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர்  பழனிச்சாமி நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.நாளை மறுநாள் திருவாரூர், நாகப்பட்டினத்திலும்ஆய்வு நடத்த உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.