முதலமைச்சர் பழனிச்சாமி இல்ல, முதலமைச்சர் மோடி !பாமக பிரச்சாரத்தில் உளறிய பிரபல நடிகர் கஞ்சா கருப்பு

this news given information about Chief Minister Narendra Modi is a popular actress in the campaign

பிரதமர் மோடியை, முதலமைச்சர் மோடி என்று கூறியுள்ளார் கஞ்சா கருப்பு.

தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரச்சாரம் செய்யும் அதேவேளையில் முக்கிய தலைவர் சிலர் வாய் உளறி மாற்றி பேசி விடுகிறார்கள்.இப்படி உளறுவது  தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

unknown node

இந்த வகையில் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.மேலும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பழனியில் நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில்,பிரதமர் மோடியை, முதலமைச்சர் மோடி என்று கூறியதால் கூட்டத்தில் இருந்த  அதிமுக, பாஜக மற்றும் பாமக  தொண்டர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.