பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு

Tamilnadu CM MK Stalin

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தமிழிசை, டாக்.ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அவரது அஞ்சலி செலுத்தினர். ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அங்கு 2500- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பங்காரு அடிகளார் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.  முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு பொன்முடி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் அரசு மரியாதை உடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.