புதுச்சேரியில் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லை – சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரியில் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று இல்லை என்று  புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று இல்லை என்று  புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது.

எனவே  தான்   புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.