புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் முதலமைச்சர் நாராயணசாமி .காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதென்றும்.முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தந்த நெருக்கடியை சமாளித்து ஆட்சி செய்துள்ளோம் .கடந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்துள்ளோம் .புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி பேசி வருகிறார்.
நாராயணசாமி தலைமையிலான காங்கிரசுக்கு இன்னும் மூன்று மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள் அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகிய நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10-ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் திமுக 3 , ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளும் காங்கிரசின் பலம் 14-ஆக உள்ளது. எதிர்க்கட்சிகள் என்ஆர் காங்கிரஸ்-7, […]
புதுச்சேரியை காப்பாற்ற பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மத்திய அரசுக்கு விரோதமாகவும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு விரோதமாகவும் கண்டனம் தெரிவித்து […]
வெளி மார்க்கெட்டில் நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார். ரிசர்வ் பேங்க் அப் இந்திய அல்லது வெளி மார்க்கெட்டில் இருந்து நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்ற […]
புதுச்சேரியில் ஜூன் 1 ஆம் தேதி அனைத்து மதவழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. இதனால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதவழிபாட்டு தலங்களை ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி […]
இன்னும் மதுபான கடைகள் திறக்காத புதுசேரியில், மது கணக்கு குளறுபடியாக இருந்ததாக சுமார் 100 கடைகளின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், புதுசேரி அரசு இன்னும் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் புதுசேரியில் கள்ளத்தனமாக அதிக விலையில் மது விற்கப்படுவதாக புதுசேரி ஆளுநர் கிரண்பேடிக்கு புதுசேரி […]
புதுச்சேரியில் இன்று ஊரடங்கின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடையுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஊரடங்கின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.மேலும் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. […]
புதுச்சேரியில் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று இல்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது. எனவே தான் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது. எனவே தான் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது,இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் […]
புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக இல்லை. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் […]
ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்குஇடையில் தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று செய்திகள் அதிகம் வலம் வந்தது.இதற்கு இடையில் பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டம் , மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.அந்த கூட்டத்தில் மாநில அரசுகள், கொரோனா தொற்றை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து வெளியே வருவது வருத்ததை தருகிறது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் கடை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி திறந்திருக்கும். அதற்கு மேல் பொதுமக்கள் வெளியே சுற்றினால் கடுமையான […]
பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்களின் கடையின் உரிமம் ரத்து என்று புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால், பெரிய நகரங்களில் […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டேவருவதால், புதுச்சேரி மாநிலத்தில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று முதல் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் […]
நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதிவு ஏற்பு விழா நாளை ( 30-ஆம் தேதி) நடைபெறுகிறது. . இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள்,வெளிநாட்டு அதிபர்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். இன்று பெங்களூரு செல்லும் நாராயணசாமி அங்கிருந்து டெல்லி சென்று விழாவில் […]
முதலமைச்சர் நாராயணசாமியுடன் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார். ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில் முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக […]
புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, காரைக்கால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜன..,14 தேதி தமிழக அரசும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதன் மூலம் 6 நாட்கள் விடுமுறையுடன் இந்தாண்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.இதனால் பொங்கலுக்கு தன் சொந்த ஊர்களுக்கு […]
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் கையெழுத்தானது. மத்திய அரசு நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 100 நகரங்களில் செயல்படுத்த உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரிக்கு ஆயிரத்து 828 கோடி ரூபாய் என மத்திய அரசு திட்ட மதிப்பீடு செய்து, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிமிடெட் என்ற, அரசு சார்பு நிறுவனத்தை அமைத்தது. இந்த நிறுவனம் […]
சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இன்னும் 5 மாதங்களுக்குள் பிரதமர் மோடியின் முகமூடி கிழக்கப்பட்டு, அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். dinasuvadu.com