அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த முதல்வர் மற்றும் துணை முதல்வர்!

Chief Minister Palanisamy and Deputy Chief Minister O. Panneerselvam flagged off the Alankanallur Jallikkattu competition.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காளையின் உரிமையாளர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில்,  காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க 2 கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் பத்து 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறுகையில், உலகமே வியக்கத்தக்க அளவிற்கு இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வழி வகுத்துக் கொடுத்தது அதிமுக அரசுதான் என கூறியுள்ளார்.