புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

புதுச்சேரில் மூன்று கட்டமாக நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதை அடுத்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 என மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கும், 2ம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கும், 3ம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025