தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு – வானிலை மையம்.!

According to the Chennai Meteorological Department, there is a possibility of rain in Tamil Nadu for the next 4 days due to Dow-Te storm.

டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாகவும் உருவாகியுள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தே தீவிர புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் குஜராத்தில் அருகே கரையை கடக்கவுள்ளது. டவ்-தே புயல் காரணமாக மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிள் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும், என்றும்  இன்று நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மற்றும் வரும் 18ம் தேதி நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.