குடை முக்கியம் மக்களே! மதியம் 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பகல் 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Update

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேலும், தமிழகத்திற்கு இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்ததாக பகல் 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய கூடும்.

அதே போல, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்