தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழக்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம்,கடலூர், திருச்சி,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமுட்ட்டதுடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.