#BREAKING: உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு..!

DMK Youth Secretary Udayanithi Stalin has been charged with slandering Chief Minister Edappadi Palanichamy and Sasikala.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராஜலட்சுமி சென்னை காவல் நிலை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் முதல்வர் குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் ராஜலட்சுமி இதுதொடர்பான வீடியோவையும் போலீசாரிடம் கொடுத்தார். அதை ஆய்வு செய்த நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.