விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு.!

A case has been registered against 30 people, including Vijay people's movement executives and fans, in Trichy Woraiyur.

திருச்சி உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதற்காக உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதால் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.