நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் கம்பிகள் பொருத்த தடை- காரணம் இதுதான்!

The front bumpers have been tolerated to avoid major damage from four-wheeler accidents. From now, car bumpers is banned in Tamil Nadu.

நான்கு சக்கர வாகனங்ளின் விபத்திகளில் இருந்து பெரிய விதமான சேதங்களை தவிப்பதாக அதன் முன்பகுதியில் பம்பர்களை பொருத்தி வருகின்றனர். இந்த வகையான பம்பர்களை பொருத்த மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதுபோன்ற பம்பர்கள் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக நாம் கார் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது அதனுடன் இதுபோன்ற பம்பர்கள் பொருத்தப்படாது. மக்கள் தங்களின் தேவைகளுக்காக இதுபோன்ற பம்பர்களை மாட்டிக்கொண்டு வருகின்றனர். இந்த வகையான பம்பர்களை மாட்டிக்கொள்வதால் வாகனம் சேதமடைவதை ஓரளவு தவிர்க்க முடியும். ஆனால் அதன் அதிர்வுகளை ஏர்பேக் சென்சாருக்கு அனுப்பாமல், பாம்பன் தாங்குகிறது. இதனால் ஏர்பேக் வேலைசெய்யமல், விபத்துகளின்போது ஏர்பேக் வேலைசெய்வதை தடுக்கிறது. இதனால் விபத்துகளின்போது உயிர் சேதங்கள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன்காரணமாக பம்பர்களை அகற்ற வேண்டும் எனவும், மீறி பம்பர்களை பொருத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை உடனடியாக அகற்றுமாறு தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.