சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகேயுள்ள சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி, சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. 6 கார்கள் மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கார்களில் ஹேண்ட் பிரேக் (ஃபெய்லியர்) செயலிழப்பதை குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து கீழே காண்போம்: பொதுவாக ஹேண்ட் பிரேக், கார்களை நிறுத்திய பின்னர்,கார்கள் நகராமல் இருக்கவும்,செங்குத்தான மற்றும் மலைப் பகுதிகளில் நிறுத்தும்போது வாகனங்கள் நகராமல் இருக்கவே பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக,சில இக்கட்டான நேரங்களில் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டும் ஹேண்ட் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முக்கியமான ஹேண்ட் பிரேக்கை முறையாக பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால்,பெரும்பாலானோர் இதனைக் கடைப்பிடிப்பது இல்லை.இதனால்,ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழக்கின்றன. ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழப்பதை […]
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக சென்னையில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,கார்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால்,சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,12,505 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்,சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.இதன்காரணமாக,ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொரோனா நோயாளிகளை வைத்துக்கொண்டு மருத்துவமனை வாசலிலேயே வரிசையில் காத்திருக்க […]
நான்கு சக்கர வாகனங்ளின் விபத்திகளில் இருந்து பெரிய விதமான சேதங்களை தவிப்பதாக அதன் முன்பகுதியில் பம்பர்களை பொருத்தி வருகின்றனர். இந்த வகையான பம்பர்களை பொருத்த மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதுபோன்ற பம்பர்கள் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக நாம் கார் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது அதனுடன் இதுபோன்ற பம்பர்கள் பொருத்தப்படாது. மக்கள் தங்களின் தேவைகளுக்காக இதுபோன்ற பம்பர்களை மாட்டிக்கொண்டு வருகின்றனர். இந்த […]
ஜீப் நிறுவனத்தின் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி, அடுத்தாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கார் நிறுவனமான ஜீப், தனது காம்பஸ் ரக கார்களை அறிமுகம் செய்துள்ளது. அது, இந்தியாவில் அதிகளவில் வரவேற்பை பெற்றுவந்த நிலையில், தற்பொழுது புதிய 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காம்ப்ஸ், 2021 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியானது. இதில் தற்போதைய காம்பஸை விட கூடுதலான டெக்னாலாஜி […]
இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது. ஹூண்டாய் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தனது “கிரெட்டா” ரக எஸ்யூவி கார்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்த கார், இந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்பொழுது கிரெட்டா காரை வெளியிட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து. இந்த கிரெட்டா எஸ்யூவி தமிழகத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் 88 நாடுகளுக்கு […]
பேட்டரி மூலம் இயங்கும் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து, அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டார்களுக்கான சிறப்பு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி […]
குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். குஜராத் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊழியர்களுக்கு இவர் ஒவ்வொரு ஆண்டும் […]
நிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா டியாகோ(tata tiago) விற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் […]
வோல்க்ஸ்வேகன்(Volkswagen)போலோ பேஸ் மற்றும் வென்ட்டோ(Vento) ஸ்போர்ட் என்ற பெயரில் புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிறப்பு பதிப்பு மாடல்களுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்படவில்லை. வோல்க்ஸ்வேகன் போலோ பேஸ் சிறப்பு பதிப்பு மாடலில் 15 அங்குல டைமண்ட் கட் ரேஸர் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கார் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.மேலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. […]