கார் விபத்து – கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் உயிரிழப்பு
கார் விபத்தில் கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே மயிலம்பாறை பகுதியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி உயிரிழந்தார். கார் டயர் வெடித்ததில் படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.