பம்பர் டூ பம்பர் : 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயம் எனும் உத்தரவை திரும்ப பெற்ற சென்னை உயர்நீதிமன்றம்!

The Chennai High Court has withdrawn an order making it mandatory to obtain insurance for 5 years on a bumper to bumper basis.

பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் எனும் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை திரும்பப் பெருவதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூறியுள்ள உயர் நீதிமன்றம், இந்தத் திட்டத்தை உடனடியாக அமல் படுத்துவதற்கான சூழல் இல்லை என கூறியுள்ளது.

அதே சமயம் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக போக்குவரத்து துறை பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.