#BreakingNews: ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Chief Minister Palanisamy has announced that the general curfew in Tamil Nadu will be extended till midnight on January 31 with relaxation.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஆகவே கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில்  தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.