BREAKING: 30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவு.!

- முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் உள்ளிட்ட காரணங்களால் மறுவாக்குப்பதிவு 30 வாக்குச்சாவடிக்கு நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தற்போது மூன்று வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன் படி முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலின் போது தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் போன்ற பல புகார்கள் எழுந்த நிலையில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச் சாவடிகளுக்கு நாளை மறுவாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது . நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் உள்ளிட்ட காரணங்களால் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025