தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் போட்டி நிலவி, வெற்றி பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சில இடங்களில் பிரச்சனை காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமாரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது. சுயேச்சை […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, பதவியேற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக – […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவியிடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான நேற்று வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19-ஆம் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டியிருந்த நிலையில், தற்போது மூன்றாம் […]
மக்கள் நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலை செய்ய தீவிரமாக களத்தில் இருக்கிறோம் என நன்கொடை கேட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள் நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நேர்மை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, என்.குமார், காவல் துணை ஆணையர் சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஆர்.சிபி […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை மக்கள் வெளியிட்டார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், […]
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. கேரள மாநிலத்தில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன.வாக்கு எண்ணிக்கையில் ,ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே […]
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில்,வழக்கினை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் […]
பல்வேறு காரணங்களுக்காக 35 பதவிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் மீண்டும் தொடங்கியது.ஆனாலும் தண்டாரப்பட்டு திருப்புவனம் ,கடலூர் மங்களூர் ஒன்றியத் தலைவர் ஒன்றியத் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக […]
பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 42 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் மீண்டும் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி […]
மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் […]
மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் பாமக வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்ளிட்டவற்றிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் 21 பேரும் திமுக உறுப்பினர்கள் 5 பேரும் பங்கேற்றனர்.மொத்தமாக […]
மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில், சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், துணை ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் 2 இடங்களில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர். தமிழ்கத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு […]
மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள் மற்றும் 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ,அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி […]
வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டு இருந்த போது அதிமுகவினர் கண்ணாடி ,கதவுகளை உடைத்து ரகளை ஈடுபட்டனர். இதனால் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் என 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் […]
விருதுநகரில் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசனை ஒன்றிய அலுவலகத்தில் உட்புகுந்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. […]
மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர்,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பாக டி.ஆர்.பாலு ,ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்று புகார் அளித்தனர். […]