#BREAKING: சனிப்பெயர்ச்சி விழா...கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம்.!

Those who come to Thirunallar Satisfaction Ceremony should have their body temperature checked. if the body temperature is high.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று  கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரிசோதனை சான்றை கட்டாயமாக்கியதை எதிர்த்து கடந்த வாரம் சிங்கார வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை எனவும், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருவோருக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு கொரனோ பரிசோதனை கட்டாயம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் கொரோனா சான்று இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.