#BREAKING: ராணிப்பேட்டை – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Default Image

ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள 8 பேரூராட்களில் போடியிடும் வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டது அதிமுக.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள 8 பேரூராட்களில் போடியிடும் வேட்பாளர்கள் பெயரை அதிமுக வெளியிட்டுள்ளது.

பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பொறுத்தளவில் அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்த நிலையில், அதனடிப்படையில், தற்போது தற்போது ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள 8 பேரூராட்களில் போடியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டது.

அதன்படி, தக்கோலம், நெமிலி, பணப்பாக்கம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி மற்றும் கலவை ஆகிய 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் 120 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டதில் மொத்தம் உள்ள 120 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்