#BREAKING: பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஒருவர் கைது.!

Police have arrested a man in connection with a firecracker factory blast that killed 19 people.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தூர் அருகே கர்ப்பிணி உட்பட 19 பேர் உயிரிழக்க காரணமான பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக குத்தகைதாரர் பொன்னுப்பாண்டியன் என்பவர் கைது ஆகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.