#BREAKING: காங்கிரஸிலிருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்.!

காங்கிரஸ் கட்சியிலிந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் நமச்சிவாயம் பாஜகவில் இணைவார் என்று தகவல் கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2 நாட்களாக தனியாக ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், நீக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025