#BREAKING: கோடநாடு வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Kodanadu murder and robbery case adjourned till October 29.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்து.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து. அரசு தரப்பில் புலன் விசாரணைக்கு கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் நடத்திய புலன் விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான் மற்றும் சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜரானர். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பித்தக்கது.