#BREAKING: ஹெலிகாப்டர் வீடியோ உண்மையா? – செல்போன் ஆய்வு!

Police examine cell phone to find out if a last-minute video of the helicopter was real.

ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என கண்டறிய செல்போனை ஆய்வு செய்கிறது காவல்துறை.

கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, விபத்து நடந்த அன்று, அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் சிலர் ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக எடுத்த வீடியோ காட்சி என்று இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்த கடைசி நிமிட வீடியோ குறித்து எந்தவித உண்மையும் விமானப்படை சார்பில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் செல்போன் காட்சி உண்மையா? என்பதை ஆய்வு செய்ய கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு போலீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி உள்ளதா என மின்வாரியத்திடம் நீலகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது என்றும் விபத்தின் போது நிலவிய வானிலை குறித்து தகவல் தர சென்னை வானிலை மையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது எனவும் கூறப்படுகிறது.