Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக 6க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. அப்போது, 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கும் பதற வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. Ten […]
இன்று (சனிக்கிழமை) கொச்சிக்கு அருகில் விலிங்டன் தீவில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தில் உள்ள விமான தளமான ஐஎன்எஸ் கருடா ஓடுபாதையில் சேடக் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இந்திய கடற்படையின் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பிற்பகல் 2:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர், புறப்பட்ட உடனேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு கடற்படை அதிகாரி யோகேந்திர சிங் தலையில் மோதியதில் பலத்த காயம் […]
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு. வடமேற்கு மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 15 பேருடன் பயணித்த பிளாக் ஹாக் என்ற ராணுவ ஹெலிகாப்டர் சினாலோவாவின் லாஸ் மோச்சிஸ் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதில் உயிர் தப்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை என்றும் விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் நடந்த அன்று […]
நீலகிரி:குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை ராணுவ தளபதி எம்.எம்.நரவனே இன்று காலை பார்வையிடுகிறார். கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ முகாமிற்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது காட்டேரி நஞ்சப்பாசத்திரம் பகுதியில் உள்ள வனப்பகுதியின் மேலே […]
ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என கண்டறிய செல்போனை ஆய்வு செய்கிறது காவல்துறை. கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, விபத்து நடந்த அன்று, அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் சிலர் ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக எடுத்த வீடியோ காட்சி என்று இணையத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த […]
உத்தரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து,13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் விரைந்து உதவிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்,விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.மேலும்,ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 14 பேரில்,முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். எனினும்,கேப்டன் வருண் சிங் மட்டும் 80% காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூர் […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து,உடல்கள் எரிந்த நிலையில் இருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் ,அவரது மனைவி,மற்றும் முப்படைத் […]
எனது தந்தை எனக்கு ஹீரோதான், அவரது மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் என மறைந்த வீரர் பிரிகேடியர் மகள் கூறியுள்ளார். ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் . இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் அவர்களின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டரும் ஒருவர். இவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த […]
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விமானப்படை சார்பில், ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று, காலை வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு முக்கிய அதிகாரிகள் […]
மருத்துவர் சஞ்சய்குமார்- லட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி, பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியது. சென்னை, அனகாபுத்தூரில், கிரீன் வேளச்சேரி அமைப்பும், பொதுமக்களும் இணைந்து பிபின் ராவத் திருவுருவப் படத்தை வைத்து, ராணுவ விமான விபத்தில் உயிரிழந்த 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தினர். அப்போது இராணுவத்தில் வீரமரணம் அடைந்த பார்த்திபனின் தந்தை மேஜர் நடராஜன், மருத்துவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது மருத்துவர் சஞ்சய்குமார்- லட்சுமி […]
இன்று மாலை பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு. குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று, காலை வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு முக்கிய அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை […]
காவல் வாகனத்தை தொடர்ந்து உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை […]
ஹெலிகாப்டர் விபத்து வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து,ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருள்ரத்தினா என்பவரின் புகாரின்பேரில் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு […]
நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் அவர்கள் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விபத்தில் சிக்கி தற்போது உயிரோடு உள்ள ஒரே ராணுவ அதிகாரி கேப்டன் வருண் சிங் 80 சதவிகித காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் […]
டெல்லி:முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை […]
நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிதைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இறந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு நேற்று சென்ற எம்ஐ-17 என்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது. இதனையடுத்து,சம்பவ இடத்தில் 9 பேரின் உடல்கள் எரிந்த […]
நீலகிரி:விபத்துக்குள்ளாவதற்கு முன் எடுக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிடங்கள் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு நேற்று சென்ற எம்ஐ-17 என்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது. இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் […]
நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் தமிழக தடவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் […]