BREAKING :குரூப் 4 முறைகேடு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு -சிபிசிஐடி .!

- சிபிசிஐடி போலீசார் 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது கூட்டுசதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
- மேலும் சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.
இது தொடர்ந்து மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது. தேர்வாணையம் நடத்திய விசாரணையில் 99 பேருக்கு இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்ததாகவும் , இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளை எழுதி வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது கூட்டுசதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
மேலும் சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025