#BREAKING: நாளை முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி!

Earlier it was said that places of worship would be allowed to open on all days from February 1, but now the order will come into effect from tomorrow.

பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது நாளை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து கோயில்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்தாக கூறப்பட்டது.

ஆனால், நாளை மற்றும் வரும் சனி, ஞாயிறு அன்று வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாளை முதலே அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தகர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டியிருந்த தடை நீக்கப்பட்டு, நாளை முதலே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.