வங்க கடலில் உருவான நிவர் புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது. இன்னும் 2 மணி நேரத்தில் மையப்பகுதி கரையை கடக்கும் எனவும் மையப்பகுதி கரையை கடக்கும்போது 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது சென்னையில் 89 மில்லி மீட்டர் மழை பெய்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக உள்ளது.