#Breaking : டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ....!

Orange alert has been issued for delta districts as heavy rains are likely.

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்டா மற்றும் கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.