டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வகை கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களையும் பாதிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் […]
கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93% பாதுகாப்பளிப்பதுடன், உயிரிழப்பிலிருந்து 98% பாதுகாப்பளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93 சதவீத பாதுகாப்பையும், உயிரிழப்பிலிருந்து 98 சதவீத பாதுகாப்பையும் அளிக்கிறது என இராணுவ மருத்துவக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஒரே நேரத்தில் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர். அசாம் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னும் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவருக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திப்ருகரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவர் இரண்டு வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர் இரண்டு வகை வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவருக்கு லேசான அறிகுறி மட்டுமே […]
முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள தற்போது பிரிட்டனில் அதிக வேகத்துடன் பரவி வருவதாக பிரிட்டன் சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 கொரோனா வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டது. இந்த டெலடா வகை கொரோனா பல நாடுகளுக்கு பரவியிருப்பதாக அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த […]
காவிரி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நல்ல நிலைக்கு வந்தையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசன தேவைக்காக ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்திறப்பு 15,000லிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியில் இருந்து 13,001 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாகவும், நீர்இருப்பு 54.20 டிஎம்சியாக உள்ளது என்பது […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். அதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதையடுத்து பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் ஏற்படும். இதை வல்லுநர்களும் தெரிவித்தனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். […]
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர ஓ.பன்னீர் செல்வம் ,அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர் .சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நேற்று மேட்டூர் அணையில் பாசனத்திற்காக இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்ததால் நேற்று காலை முதல் வினாடிக்கு 10,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்தது காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று மேட்டூர் அணையில் பாசனத்திற்காக இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. தற்போது மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் […]