#BREAKING: மாணவர்கள் கவனத்திற்கு.. 10, 12-ம் வகுப்புக்கு துணை தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அறிவிப்பு!

Default Image

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தரவில் 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அறிவித்தார். பிளஸ் 2 தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்பட உள்ளது என்றும் அறிவித்தார். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் அரசு துணை நிற்கும் எனவும் தெரிவித்தார். மேலும், 12-ம் வகுப்புக்கு ஜூலை 27 முதல் துணை தேர்வுகள் தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார்.

இதனிடையே, 10-ஆம் வகுப்பு முடிவுகளையும் அமைச்சர் வெளியிட்டார். அதில், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவிகள் 94.38% (4.27 லட்சம்), மாணவர்கள் 85.83% (3.94 லட்சம்) பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை நண்பகல் 12 மணி முதல் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 886 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்., 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 246 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம் என்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் (97.22%) தேர்ச்சி விகிதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் அறிவித்துக்கொள்ளலாம். 12-ம் வகுப்பு மாணவர்கள் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்துகொள்ளலாம். 10-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை நண்பகல் 12 மணி முதல் அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori