பி.எஃப்.ஐ மீதான தடை – 2வது நாளாக இன்று விசாரணை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான தடை தொடர்பாக 2-வது நாளாக இன்று விசாரணை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகளை 5 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்த சமயத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான தடை தொடர்பாக நேற்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான தடை தொடர்பாக 2-வது நாளாக இன்று விசாரணை நடைபெறுகிறது. சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு நடுவர் மன்ற சென்னை அமர்வு 3 நாட்கள் விசாரணை நடத்துகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மன்ற நடுவரான தினேஷ்குமார் சர்மா விசாரணை நடத்துகிறார்.
இந்த விசாரணையின்போது சாட்சியம் அளிக்க விரும்புகின்றவர்கள் உறுதிமொழி பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்றும் குறுக்கு விசாரணை ஏதேனும் இருப்பின் அதற்காக நடுவர் மன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024