துவங்க இருக்கிறது பாலமேடு ஜல்லிக்கட்டு.
தமிழகமே தவிப்புடன் எதிர்பார்ப்பு
தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரைமாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும்ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெற தாய்ர் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 700 காளைகளும், 936 காளையர்களும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து தயாரக உள்ளனர். தற்போது, இந்தபாலமேடு ஜல்லிக்கட்டில் முறையான டோக்கன் பெறாமல் 100-க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்து அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இன்னமும் சரியாக சில நிமிடங்களில் போட்டி துவங்க இருகிறது.