B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! அக்.8 முதல் கலந்தாய்வு..

பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு என அறிவிப்பு.

பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு என அறிவிப்பு.

B.Arch., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ளது. 2,491 பேர் விண்ணப்பித்ததில் 1,651 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,609 இடங்களுக்கு 1,651 பேர் போட்டி நிலவுகிறது. பி.ஆர்க் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், www.tneaonline.org என்ற இணையதளத்தை அணுகலாம். குறைகளை நிவர்த்தி செய்ய நாளையும், நாளை மறுநாளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.