தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.பாஸ்கரனை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளனர்.
தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த மீனாகுமாரியின் பதவிக்காலம் டிசம்பர் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய தலைவரை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2016 முதல் 2018 வரை பாஸ்கரன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.