#Alert:இன்று 16 மாவட்டங்களில் கனமழை;மீனவர்களே இங்கு செல்ல வேண்டாம் -வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஈரோடு,தருமபுரி,கிருஷ்ணகிரி,சேலம்,நாமக்கல்,திருச்சி, பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

unknown node

மேலும்,நாளை தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,நாளை மறுநாள் (17.06.2022) தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி,விழுப்புரம்,திருவண்ணாமலை,நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர்,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

unknown node

மேலும்,கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்,நாளை மற்றும் நாளை மறுதினம் (16.06.2022,17.06.2022) தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

unknown node