மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கிடைக்கும் -பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

Default Image

நேற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.மேலும் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அதிமுக-வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற உரிய நேரத்தில் நிச்சயம் பரிசீலிக்கப்படும். தற்போது அதிமுகவுக்கு இடம்தராவிட்டாலும் இது முழுமையான அமைச்சரவை இல்லை .அமைச்சரவையை தேர்வு செய்வது பிரதமரின் முடிவு என்றும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்