அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு.. எந்தெந்த தொகுதிக்கு யார் யார்?

இதுவரை அதிமுக 148 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இன்னும் 19 தொகுதிகளில் அறிவிக்கவில்லை.

Hero Image

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ஏற்கனவே முதல் கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக மேலும் 127 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.இந்த இரண்டாவது கட்டப் பட்டியலில் மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள பல முக்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சில முக்கிய வேட்பாளர்கள் வருமாறு:

  • R. சந்திரசேகர் — திருச்செங்கோடு
  • R. மனோகரன் — ஈரோடு (கிழக்கு)
  • P. சத்தியபாமா — தாராபுரம் (தனி)
  • N.S.N. நடராஜ் — காங்கயம்
  • J.K. (எ) S. ஜெயக்குமார் — பெருந்துறை
  • P. ஹரிபாஸ்கர் — அந்தியூர்
  • V.B. பிரபு — கோபிச்செட்டிப்பாளையம்

இதேபோல்,

  • இரா. குமரகுரு — உளுந்தூர்பேட்டை
  • R. ராகேஷ் — சங்கராபுரம்
  • S. ராஜ் காந்தி — கள்ளக்குறிச்சி (தனி)
  • A. நல்லதம்பி — கங்கவல்லி (தனி)
  • A.P. ஜெயசங்கரன் — ஆத்தூர் (தனி)
  • P. உஷாராணி — ஏற்காடு (ST)
  • R. மணி — ஓமலூர்
  • G. வெங்கடாஜலம் — மேட்டூர்
  • S. வெற்றிவேல் — சங்ககிரி
  • J. வினோத் — சேலம்

மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெண் வேட்பாளர்கள் மற்றும் தனித் தொகுதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிமுக மொத்தம் 148 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், இன்னும் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 19 தொகுதிகளில் 16 தொகுதிகள் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.எடப்பாடி பழனிச்சாமியின் இந்த விரைவான இரண்டாவது கட்ட வேட்பாளர் அறிவிப்பு, அதிமுகவின் தேர்தல் தயாரிப்புகளை மேலும் வேகப்படுத்தியுள்ளது. மீதமுள்ள 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

unknown node