அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி -ராமதாஸ்

Default Image
  • அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி ஆகும். பொதுக்குழுவில் நீங்கள் எனக்கு கொடுத்த அதிகாரத்தை சரியாகவே செய்து இருக்கிறேன். கூட்டணி வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும் .எந்த காலத்திலும் பாமக தனது கொள்கையை விட்டுக்கொடுக்காது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்