#Breaking: "முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி"- திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்!

The temple administration has said that entry to the Subramaniya Swamy Temple in Thiruchendur will be allowed only if one is wearing a mask.

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் ஒருநாள் பாதிப்பு 6,000-ஐ நெருங்கும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியும் வருகிறது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் இரவு 8 மணி வரை வழிபாட்டு நடத்த அனுமதி வழங்கியது. இந்நிலையில், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது. மேலும், கோவிலுக்குள் வரும் முன் பக்தர்கள் காய், கால்களை தண்ணீரால் கழுவிக்கொண்டும், கிருமிநாசினி பயன்படுத்தியபின்பே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.