நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா!

Coronavirus has been confirmed to actor and Samathuva Makkal Katchi leader Sarath Kumar. His wife Radhika Sarathkumar said on her twitter.

நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பான அவரின் ட்விட்டர் பதிவில், ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி தொற்று உறுதி உறுதியான காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் சரத்குமார் உள்ளார் எனவும், அவரது உடல்நிலை குறித்து தெரிவிப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

unknown node