காஞ்சிபுரம் : சொகுசு விடுதியில் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.!
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சொகுசு விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் போது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பிரபல சொகுசு விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 3 தொழிலாளர்கள் வந்துள்ளனர்
அவர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போதே விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். அதன் பின்னர் உயிரிழந்துள்ளானர்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வந்து, கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் உடலை மீட்டனர். தற்போது இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.